Tuesday, May 20, 2025
HomeMain NewsAustraliaகுழந்தை பாலினத்தை தெரிந்துகொள்ள அமெரிக்கா செல்லும் மெல்பேர்ண் தாய்

குழந்தை பாலினத்தை தெரிந்துகொள்ள அமெரிக்கா செல்லும் மெல்பேர்ண் தாய்

மென்பேர்ண் நகரத்திலிருந்து தனது பிறக்காத குழந்தையின் பாலினத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா சென்ற ஒரு தாய் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த தாய்க்கு Instagram-இல் 60,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர். மேலும் அவர் $45,000 செலுத்தி அமெரிக்காவிற்கு பறந்து சென்று குழந்தையின் பாலினத்தை சரிபார்க்கப் போவதாக அதில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையின் தாயான Caitlyn Bailey, இந்த முறை IVF மூலம் கர்ப்பமானார்.

2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் IVF பாலினத் தேர்வு தடைசெய்யப்பட்டது. மேலும் இந்த சேவையை வழங்கும் மருத்துவமனைகளும் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எனினும் தங்கள் குழந்தையின் பாலினத்தை உறுதிப்படுத்த வெளிநாடுகளுக்குச் செல்லும் பல ஆஸ்திரேலிய தாய்மார்கள் சென்றது பற்றி முந்தைய செய்திகள் உள்ளன.

இருப்பினும், மோனாஷ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் சட்டப் பேராசிரியர் Paula Gerber உட்பட பல மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளன.

பல கலாச்சாரங்களில் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமையும், பெண்களும் மகள்களும் குறைந்த மதிப்புள்ளவர்கள் என்ற தவறான கருத்தும் இருப்பதாக Gerber கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments