இறம்பொடை – கெரண்டி எல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய, உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
விபத்தில் உயிரிழந்த 23 பேர் வசித்துவந்த, திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுணாகொட்டுவ, பண்டுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வண்ணாத்திவில்லு, சிலாபம், புத்தல, தனமல்வில, வெல்லவாய, கந்தளாய், ரம்பேவ ஆகிய பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.