பேர்ன் மாகாணத்தில் நேற்று மதியம், வோர்ப் அருகே உள்ள விஸ்லன் சுரங்கப்பாதையில் ஒரு கடுமையான போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
தற்போதைய தகவலின்படி, ரூபிஜென் திசையில் இருந்து வந்த ஒரு ஓட்டுநர் சுரங்கப்பாதை வழியாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, (Rüfenacht) ரூஃபெனாக்ட்டிலிருந்து வோர்ப் (Worb) நோக்கிச் சென்று கொண்டிருந்த எதிரே வந்த காருடன் மோதினார். மோதல் மிகவும் கடுமையாக இருந்ததால், இரண்டாவது வாகனத்தின் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார். உயிரிழந்தவர் பேர்ன் மாகாணத்தைச்சேர்ந்த 40 வயது மிக்கவர் என தெரியவந்துள்ளது.