அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த பூனை ஒன்று 8 அடிக்கு மேல் குதித்து சாதனை படைத்துள்ள வீடியோ சோசியல் மீடியாக்களில் அதிகமாகி பகிரப்பட்டு வருகின்றது
இது துள்ளி குதிக்கும் அழகை பார்த்த பலர் இதை பறக்கும் பூனை என வர்ணித்துள்ளதுனர்.
இந்த பூனை 8 அடி 5 அங்குல தூரம் குதித்து கின்னஸ் உலக சாதனை புத்தககத்தில் இடம்பிடித்துள்ளது
7 வயதான இந்த பூனை உலகில் மிக நீங்க தூரத்திற்கு அதாவது நீளமான தாவலுக்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இதற்காகவே இந்த பூனை பயிற்சி எடுத்து வந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்க்கு முன்னர் படைக்கப்பட்டிருந்த வேறொரு பூனையின் சாதனையை முறியடிக்க இந்த பூனைக்கு இரண்டு வருட உழைப்போடு 1,000க்கும் மேற்பட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.