நடிகர் ஆமிர் கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 2020-ஆம் ஆண்டு ஆமிர் கான் வெளியிட்ட புகைப்படத்தால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு நடிகர் ஆமிர் கான் தயாரித்து நடித்த படம் ‘தாரே ஜமீன் பர்’ (taare zameen par). டிஸ்லெக்ஸியா எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தை ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.
டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை நெகிழ்ச்சியான வகையில் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பெரும் வெற்றி பெற்ற தாரே ஜமீன் பர் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் ஆமிர் கான். ‘சிதாரே ஜமீன் பர்’ (Sitaare Zameen Par) என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கிய ஆர்.எஸ். பிரசன்னா இயக்கி வருகிறார். படம் வரும் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை செவ்வாய் கிழமை படக்குழு வெளியிட்டது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடைப்பந்து பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்துள்ளார்.