Thursday, May 29, 2025
HomeMain NewsOther Countryஇந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.

கடந்த மே 10 ஆம் திகதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

இருப்பினும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினையும் ஒரு நிபந்தனையாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடும் போது ஷெபாஸ் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது என்றும் இந்தியா ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments