இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்று ஒப்புதல் வழங்கியள்ளது.நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம்.
சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்” என்று பேசினார்.
ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப்பின் பேச்சு இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் – ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கை வந்த சில வாரங்களிலேயே இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுத்தனதிடம் டிரம்ப் கோரியுள்ளார்.
DonaldTrump,trade,war,Apple,Iphone,taxation,TimCook