இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டாமி பால் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.
3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜானிக் சின்னர் இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.