பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சல்மான் ருஷ்டி எழுதிய “தி சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதன்படி அவர் பல்வேறு நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்தார்.
இந்தநிலையில் 2022ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது, நபர் ஒருவரினால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டார்.
இதில் சல்மான் ருஷ்டி படுகாயமடைந்ததுடன், அவரது வலது கண் பார்வை பறிபோனது.
இதன்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை முயற்சி, கொடூர தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.