Thursday, June 12, 2025
HomeSports6 விக்கெட்டுகளால் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய டெல்லி கெப்பிட்டல்ஸ்..!

6 விக்கெட்டுகளால் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய டெல்லி கெப்பிட்டல்ஸ்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) அதிகபட்சமாக 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

அணி சார்பில் சமீர் ரிஸ்வி (Sameer Rizvi) அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments