தேர்தலில் தோல்வி – பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ட்ரம்ப் ஆலோசனை!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்ய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. மேலும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியின் பெரும் தோல்விக்கு ஈரான் மீதான அமெரிக்காவின் போர் மற்றும் அதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. ஈரான் போரை அமெரிக்க அரசின் நிர்வாகம் கையாண்டது குறித்தும் மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், பீட் ஹெக்செத் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர வேண்டுமா? என்பது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்துடன், ஈரான் போர் விவகாரத்தில் அரசின் ஆலோசகர்களாகச் செயல்பட்டு வரும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், விரைவில் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டீஸ் நியமிக்கப்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

முன்னதாக, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி கடும் தோல்வி அடைந்ததற்கு ஈரான் மீதான போர்தான் காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருந“மழட குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles