ஐ.நா சபையில் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பேச்சால் அவையை விட்டு இருநாடுகள் வெளியேறின

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும்போது இரண்டு நாடுகளின் தூதுவர்கள் வெளிநடப்பு செய்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஈரான் மீதான அவ்வப்போது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் பேச தொடங்கியபோது ​​ஈரானியத் தூதுக்குழுவினர் வெளியேறினர்; அவர்களில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார்.

ட்ரம்ப் உரையாற்றும்போது, “நான் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்து, அவர்கள் முன்பை விட மிகச் சிறந்த நாடாகத் தங்களை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்கலாமா? எனக் கேள்வி எழுப்பினார்.

அல்லது அந்த இஸ்லாமியக் குடியரசை முற்றிலுமாக அழித்து, அவர்கள் மீண்டும் மக்களைக் கொல்லவோ அல்லது நாடுகளை அழிக்கவோ வாய்ப்பளிக்காமல் விரைவாகச் செயல்படலாமா?”

“பிழைப்பதற்கான வாய்ப்போ அல்லது எதிர்காலச் சிறப்போ அல்லது அடுத்த தலைமுறையோ இல்லாத வகையில் அவர்களை நரகத்திற்குள் தள்ளலாமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு நாம் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்வோம் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

அதேநேரம் கியூபா குறித்து பேசிய அவர் அந்த நாட்டை தோல்வியுற்ற நாடு என விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து இவ்விருநாடுகளும் ட்ரம்பின் உரையை புறக்கணித்து வெளியேறின.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles