அமெரிக்கா – வொஷிங்டன் மாநிலம், சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 2 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில், சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
