மலாக்காவில் மருத்துவமனை உடையுடன் காரில் மூதாட்டி சடலமாக மீட்பு

மலாக்கா, ஆயர் கெரோவிலுள்ள தாமான் தாசிக் உத்தாமா குடியிருப்புப் பகுதியில், 69 வயது மூதாட்டி ஒருவர் காருக்குள் இறந்த நிலையில் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டார். அவர் மருத்துவமனை உடை அணிந்திருந்ததுடன், இடது கை கட்டப்பட்டிருந்தது.

பிற்பகல் 2.50 மணியளவில், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய மூதாட்டியை அவரது 44 வயது மகன் காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், வீட்டிற்குள் செல்ல அவர் மறுத்ததால், மகன் அவரை காரில் விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார் .

பின்னர், அண்டை வீட்டைச் சேர்ந்த ஒருவர் காரின் கதவுகள் திறந்திருப்பதையும், மூதாட்டியின் ஒரு கால் காருக்கு வெளியே இருந்ததையும் கவனித்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் அருகில் சென்று பார்த்தபோது, மூதாட்டி சுயநினைவின்றி இருந்துள்ளார்.

பொலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், அவரது உடலில் குற்றச் செயலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மூதாட்டிக்கு நீரிழிவு நோய் இருந்ததாக அவரது மகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles