சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் அண்டி பர்ன்ஹாமிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கிடையே நாட்டை வழிநடத்துவதில் அவர் வெற்றிபெற தாம் மனதார வாழ்த்துவதாகப் பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதை வோங் கடிதத்தில் குறிப்பிட்டார்.
பிரதமர் பர்ன்ஹாiம விரைவில் சந்திக்க விரும்புகிறார் எனவும் அவரைச் சிங்கப்பூருக்கு வரவேற்பதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
