சிரியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா மற்றும் அல் சுக்னா நகரங்களுக்கு இடையிலான பாலைவன நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று இந்த விபத்து நடந்துள்ளது சாலையில் எதிரெதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்துக்குள்ளான இரு பேருந்துகளில் ஒன்று சிரிய நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தாகும். மற்றொன்று பொதுமக்கள் பயணித்த பேருந்தாகும்.
இந்த விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
