பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் (2026) பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுலா அழகி ஆண்ட்ரியா டெல் வால் மீது உணவகத்தின் அறையில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை பிரபல லத்தீன் அமெரிக்க ஒப்பனையாளரான ஜியோவானி லகுனா என்பவரே நடத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முகத்தில் இரத்தக் காயங்களுடன் அழகி ஆண்ட்ரியா வெளியிட்ட நேரடி சமூக வலைத்தள காணொளி மூலம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உணவகத்தின் அறை சத்தத்தைக் கேட்டு ஏனைய விருந்தினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பிரான்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அழகியை மீட்டனர். காயமடைந்த ஆண்ட்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலை நடத்திய ஒப்பனையாளர் ஜியோவானி லகுனாவை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
