சவூதி மீது ஹவுதிகள் தாக்குதல்! தூதரக அதிகாரிகளை வெளியேற அமெரிக்க உத்தரவு

சவூதி மீது ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுக்கு சொந்தமான அரம்கோ நிறுவனத்தின் ஷ்யாபா உண்ணெய் உற்பத்தி ஆலையின் மீது நேற்று காலை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ், நேபாளத்தைச் சேர்ந்தவர் இருவர் உயிரிழந்தனர். இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘எதிரிகளால் ஏவப்பட்ட டிரோனை ராணுவத்தினர் இடைமறித்து அழித்து விட்டனர். இதன் உடைந்த பாகங்கள் வெடித்து சிதறி விழுந்ததில் இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் எண்ணெய் ஆலைகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,’ தெரிவித்துள்ளனர்.

சவுதியில் பதற்றம் அதிகரித்த காரணத்தினால் அங்குள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles