ஊழலற்ற நாடுகள் தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாவது இடம்

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ‘வோர்ல்ட் ஜஸ்டிஸ் புரோஜெக்ட்’ என்ற தன்னிச்சை அமைப்பின் குறியீட்டின்படி, ஒழுங்கு, பாதுகாப்பில் உலகிலேயே முதன்மை நாடாகவும் ஊழலற்ற நாடுகள் தரவரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் சிங்கப்பூர் பிடித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் உலகளாவிய சட்டரீதியான ஆட்சி குறித்த தரவரிசையில், 143 நாடுகளுக்கு இடையே ஒட்டுமொத்த பட்டியலில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் உயர்ந்து 14வது இடத்தைப் பிடித்துள்ளது.

நேற்று புதன்கிழமை (21) வெளியிடப்பட்ட அறிக்கையில், நடப்பாண்டில் சட்டரீதியான ஆட்சிக்கான குறியீட்டு மதிப்பெண் அதிகரித்துள்ள மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சர்வாதிகாரம் என்பது இனி வளர்ந்துவரும் போக்கல்ல. மாறாக, அது வலுவாக ஊன்றப்பட்டுவிட்டது. அரசாங்க அதிகாரங்களுக்கான கட்டுப்பாடுகள், வெளிப்படையான அரசாங்கம் அல்லது அடிப்படை உரிமைகள் ஆகிய சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஏதேனும் ஒரு பாதுகாப்பில் 86 விழுக்காட்டுக்கும் அதிகமான நாடுகள் தொடர்ந்து ஐந்தாண்டுகளாகச் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால், இதில் சிங்கப்பூர் உட்படவில்லை,” என்று வோர்ல்ட் ஜஸ்டிஸ் புரோஜெக்ட் தெரிவித்தது.

2026ஆம் ஆண்டின் உலகளாவிய சட்டரீதியான ஆட்சி குறித்த தரவரிசையில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து நோர்வே, பின்லாந்து, சுவீடன், லக்சம்பர்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

வெனிசுவேலா மிகக் குறைந்த மதிப்பெண்ணைப் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான், ஹெய்ட்டி, கம்போடியா, நிக்கராகுவா ஆகிய நாடுகள் உள்ளன.

கிழக்கு ஆசியா, பசிபிக் வட்டாரத்தில் உள்ள 15 நாடுகளில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் ஒட்டுமொத்த அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles