நாக்பூரைச் சேர்ந்த முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி நிறுவனமான சோலார் இன்டஸ்டிரீஸ், பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா 2 டிரோனை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பான இந்த ட்ரோனில் பகல், இரவு நேரங்களில் கண்காணிக்கும் வகையிலான நவீன கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 கிலோ எடைகொண்ட ‘டேண்டம் ஷேப்டு -சார்ஜ்’ வெடிகுண்டு இதில் உள்ளது. தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் பறக்கக்கூடிய திறன் கொண்டுள்ளது. 50 கி.மீ., தொலைவு வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிரிகளின் டிரோன் சிக்னலை ஹக் செய்ய முடியாதபடி, மின்னணு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் மாதம் நாகாஸ்திரா 2 டிரோன் தொழில்நுட்ப சோதனை, ராஜஸ்தானில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது, நாகாஸ்திரா 2 டிரோன் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
