த.வெ.க. இளைஞர் மீது தாக்குதல் நடத்திய இருவரை பொலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சொலமன். இவர் த.வெ.க. உறுப்பினர் என கூறப்படுகிறது. இவர் தனது உறவினரை பார்க்க நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது சொலமனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் த.வெ.க. பாடல் ரிங் டோனாக ஒலித்தது.
அப்போது அருகில் இருந்த தி.மு.க. நிர்வாகிகள் கோபத்தில் சொலமனை தகாத வார்த்தைகளில் விமர்சித்தபடி கடுமையாக தாக்கியுள்ளனர். தலைப் பகுதி, கண் அருகே தாக்கியதில் ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து சொலமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், –
‘என் செல்போனில் த.வெ.க. பாடலை ரிங்டோனாக வைத்துள்ளேன். மருத்துவமனையில் இருப்பதால் பேசக்கூடாது என்று கட் செய்தேன். எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது.
அப்போது அருகில் இருந்த திமுக நிர்வாகி என்னை அசிங்கமாக திட்டினார். ‘இவங்கள் என்ன ஜெய்சிட்டு ஓவரா ஆடுறாங்க. எல்லோரையும் வெட்டுவேன் என்று மிரட்டினார்.
சம்பவம் குறித்து சொலமன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். கீழ்ப்பாக்கம் பொலீஸார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பொலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். என்றார்
