முதல்முறையாக கால்நடைகளை தாக்கும் ‘ஷமோண்டா’ வைரஸ் தொற்றால் பிரான்ஸில் ஒருவர் பலி!

ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்த ஷமோண்டா வகை வைரஸ், முதல்முறையாக மனிதர் ஒருவரை தாக்கியது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 1960களில் ஷமோண்டா என்ற கொடிய வைரஸ் முதல்முறையாக கண்டறியப்பட்டது. ஆர்த்தோபுன்யா வகையைச் சேர்ந்த இந்த வைரஸ், கொசு போன்ற மிகச்சிறிய பூச்சிகள் கடிப்பதன் மூலம் மாடுகள், ஆடுகள் மற்றும் குதிரைகளுக்கு பரவுகிறது. இது தாக்கும் கால்நடைகளுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் பால் உற்பத்தியும் பெருமளவு சரியும்.

​இதுவரை விலங்குகளுக்கு மட்டுமே பரவி வந்த இந்த வைரஸ், மனிதர்களுக்கு பரவியதில்லை. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தீவிர உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஷமோண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

ஏற்கனவே நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருந்த அந்த நபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வைரஸ் தொற்றால், அவரது மூளைப் பகுதியில் ஏற்பட்ட தீவிர பாதிப்புகளே, உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

​இந்த சம்பவம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மையத்திற்கு, பிரான்ஸ் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

​இதுகுறித்து பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: உயிரிழந்தவருக்கு பூச்சி கடித்ததன் மூலம் வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இது கடுமையான நோய் பாதிப்பு கொண்ட ஒருவருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள விதிவிலக்கான சம்பவம். இதனால் பொதுமக்களுக்கு நேரடி ஆபத்தோ, பெருந்தொற்று அச்சுறுத்தலோ இதுவரை கண்டறியப்படவில்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles