இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவருக்கு அவுஸ்திரேலியாவில் உயரிய அங்கீகாரம்

ஆஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்துக்கான 2026ஆம் ஆண்டின் சிறந்த பொது மருத்துவர் (General Practitioner of the Year) விருதை இலங்கையை பூர்வீகமாகக கொண்ட டாக்டர் வஜ்னா ரஃபீக் (Dr. Vajna Rafeek) பெற்றுள்ளார்

அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் மருத்துவச் சேவை, மருத்துவக் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பில் சிறந்து விளங்கும் டாக்டர் வஜ்னா ரஃபீக் அவர்களுக்கு, Royal Australian College of General Practitioners அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான விக்ரோறியாவின் சிறந்த பொது மருத்துவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் பணியாற்றும் Hanson Medical Centre, ஆண்டின் சிறந்த மருத்துவ நிலையம் (Practice of the Year) என்ற விருதையும் பெற்றுள்ளது.

மருத்துவருக்கும் மருத்துவ நிலையத்திற்கும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் பணியாற்றிவரும் டாக்டர் வஜ்னா ரஃபீக், நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதுடன், மருத்துவப் பட்டதாரிகள் மற்றும் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கள் தொழில்முறை வாழ்க்கையை உருவாக்குவதற்கும் வழிகாட்டி வருகிறார்.

2012ஆம் ஆண்டு Hanson Medical Centre ஆரம்பிக்கப்பட்டபோது, விரைவான மருத்துவ உதவி கிடைப்பதற்கான அவசரச் சிகிச்சைச் சேவைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட பணிநேரங்களை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

2016ஆம் ஆண்டு மெல்பேர்ணில் இடியுடன் கூடிய மழையால் தூண்டப்பட்ட ஆஸ்துமா நெருக்கடியின்போது, சுமார் 300 நோயாளிகளுக்கு அவசர சுவாசச் சிகிச்சை வழங்குவதில் தனது மருத்துவக் குழுவை வழிநடத்தினார்.

மருத்துவ துறையில் மட்டுமன்றி, தமிழ் இலக்கியம் மற்றும் கலாசார செயற்பாடுகளிலும் இவர் பங்களித்து வருகிறார்.

ஆஸ்திரேலியத தமிழ் இலக்கிய கலை சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர், இளம் மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டு வருகிறார்.

இலங்கையை பூர்வீகமாகக கொண்ட முஸ்லிம் பெண் மருத்துவரான டாக்டர் வஜ்னா ரஃபீக்கின் இந்தச் சாதனை, மருத்துவத் துறையில் அவரது அர்ப்பணிப்பையும் சேவையையும் எடுத்துக்காட்டுகிறது.

கிழக்கிலங்கையை சேர்ந்த இவர் பிரபல கவிஞர் மருதூர்க்கனியின் புதல்வி ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles