பிரித்தானியாவைத் தாக்கிய ‘ஒஸ்டின்’ புயல்; 7000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு

பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் செனல் தீவுகளை ‘ஒஸ்டின்’ புயல் தாக்கியுள்ள நிலையில், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளில் சுமார் 7,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

‘ஒஸ்டின்’ புயல் காரணமாக மணித்தியாலத்திற்கு சுமார் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளின் பல இடங்களுக்கு செம்மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேர்ன்சி மற்றும் ஜெர்சி தீவுகளுக்கு மிகக் கடுமையான வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஜெர்சியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புயலின் தாக்கத்தால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மின்சாரக் கம்பிகளும் அறுந்து வீழ்ந்துள்ளன. இதனால், வீதிப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு டெவோன் பிராந்திய சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles