அமெரிக்காவின் 20 இராணுவ தளங்களை ஈரான் சேதப்படுத்தியுள்ளது என்று பி.பி.சி. தெரிவித்துள்ளது.
பி.பி.சி. வெரிபை செயற்கைகோள் படங்கள் மற்றும் காணொலிகளை ஆதாரமாகக் கொண்டு இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கில் 8 நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்களை தாக்கியது. இதனால், பல கோடி டொலர் சொத்துகள் அழிவடைந்தன.
எனினும், ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்காவின் 28 தளங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், இந்தப் போரில் 13 ஆயிரம் இலக்குகளை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியழித்தன என்று தெரிவிக்கப்பட்டது.
