வசூலில் 800 கோடி ரூபா பெற்று வரலாற்று சாதனை படைத்தது ‘ஜெயிலர் 2’

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800 கோடியைக் கடந்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி வெறும் 18 நாட்களுக்குள் இத்திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.807.25 கோடி வசூலித்துள்ளதாகப் வசூல் கண்காணிப்பு நிறுவனமான Sacnilk தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.533.75 கோடியை மொத்த வசூலாகப் பெற்றுள்ள இப்படம், வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து மேலும் ரூ.273.50 கோடியை வசூலித்துள்ளது.

இந்தச் சாதனையின் மூலம், 2018ஆம் ஆண்டு வெளியான ‘2.0’ திரைப்படத்தின் வசூல் சாதனையையும் ரஜினிகாந்த் முறியடித்துள்ளார். இதன் மூலம் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படத்தின் நாயகன் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.

இதில், ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார்.

மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தையும் ‘ஜெயிலர் 2’ பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles