அலாஸ்காவில் உருகும் பனிப்பாறைகள் – பெரும் சுனாமி ஏற்படும் அபாயம்!

அமெரிக்கா அலாஸ்கா பிராந்தியத்தில் பனிப்பாறைகள் தீவிரமாக உருகி வருவதுடன் மலைச்சரிவுகள் ஏற்படுவதால், எதிர்காலத்தில் 1,578 அடி (சுமார் 481 மீற்றர்) உயரத்திற்கு ‘மெகா சுனாமி’ (Mega-Tsunami) மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாகப் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் இந்தப் பனிச்சரிவுகள், கரையோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலாப் படகுகளுக்குப் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அலாஸ்காவின் குறுகிய வளைகுடாப் பகுதிகளில் (Fjords) நிலைகொண்டிருந்த பிரம்மாண்ட பனிப்பாறைகள், பருவநிலை மாற்றத்தின் காரணமாக உருகித் தங்களின் தடிமனை இழந்து வருகின்றன.

இதனால் பனிப்பாறைகளைத் தாங்கிப் பிடித்திருந்த மலையின் பாறைச்சரிவுகள் பலமிழந்து, கோடிக்கணக்கான தொன் எடையுள்ள பாறைகளும் பனிக்கட்டிகளும் ஒரே நேரத்தில் நீர்நிலைகளுக்குள் சரிந்து விழுகின்றன.

முன்னதாக அலாஸ்காவின் லிடுயா பே (Lituya Bay) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 1,720 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பி மரங்களையும் மலைக்காடுகளையும் அழித்தொழித்த வரலாற்றுச் சம்பவத்தை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சர்வதேசக் கடல்சார் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் அலாஸ்கா மற்றும் கிறீன்லாந்து பகுதிகளில் செயற்கைக்கோள் தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வில், பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் இதுபோன்ற மெகா சுனாமிகள் மீண்டும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாற வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆழ்கடலில் நிலநடுக்கத்தால் ஏற்படும் சாதாரண சுனாமிகளை விட, குறுகிய நீர்நிலைகளில் நிலச்சரிவால் ஏற்படும் மெகா சுனாமிகள் சில நிமிடங்களிலேயே கரையைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை.

இதனால் அலாஸ்கா வளைகுடாப் பகுதியில் பயணிக்கும் சுற்றுலாப் படகுகள், கப்பல்கள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு முன்எச்சரிக்கை அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும் என பருவநிலை வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles