Monday, February 2, 2026
HomeMain NewsTechnologyடாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா ஹாரியர் EV கார் இந்தியாவில் ரூ.21.49 லட்சம் ரூபாய்க்கு (எக்ஸ் ஷோ ரூம் விலை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரில் 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த பேட்டரியின் மூலம் அதிகபட்சமாக 396hp பவரையும் மற்றும் 504Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும்

எம்பவர்டு ஆக்சைடு, நைனிடால் நாக்டர்ன், பிரிஸ்டைன் ஒயிட் மற்றும் ப்யூர் கிரே ஆகிய 4 வண்ணங்களில் இந்த மாடல் சந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹாரியர் EVயின் RWD 75kWh பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 627 கிமீ வரை பயணிக்க முடியும்.

7.2kW AC சார்ஜர் மூலம் ஹாரியர் EVயை 10.7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த மின்சார காருக்கான முன்பதிவு ஜூலை 2 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular