கனடாவின், மானிடோபா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலினால் 1.4 மில்லியன் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கனடாவின் மானிடோபாவைச் சேர்ந்த சுமார் 17,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத்தீயிலிருந்து பரவும் புகை காரணமாக, மினசோட்டா மற்றும் வடக்கு டகோட்டா மாநிலங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஏற்பட்ட காட்டுத்தீப்பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், மூன்று மாகாணங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
