Monday, February 2, 2026
HomeCinemaதக் லைஃப் திரைப்படத்தால் ஜன நாயகனுக்கு வந்த சிக்கல்

தக் லைஃப் திரைப்படத்தால் ஜன நாயகனுக்கு வந்த சிக்கல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’.

இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லியதற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல்ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கூடாது என போராடி வருகின்றனர்.

அதேப் போல் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் 2.30 மணிவரை கெடு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் மொழி , சாதி, பேதமின்றி கமலுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் அவர் தரப்பில் இருந்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனையளிக்கிறது என கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தற்பொழுது தக் லைக் திரைப்படத்தினால் விஜய் நடித்த ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜன நாயகன் திரைப்படத்தை தயாரிப்பது கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெங்களூருவை சேர்ந்த நிறுவனமாகும்.

கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடாவிட்டால்.

தமிழ் நாட்டில் ஜன நாயகன் திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அதே நிறுவனம் தயாரிக்கும் டாக்சிக் திரைப்படத்தில் யாஷ் நடிக்கிறார்.

அப்படமும் ஒரு பேன் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.

அந்த திரைப்படத்தையும் வெளியிட விடமாட்டோம் என அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் ஜன நாயகன் மற்றும் டாக்சிக் திரைப்படங்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular