பிரான்ஸில் திறந்தவெளியில் திருப்பலி நடத்தும் பாப்பரசர் – அலைமோதும் மக்கள் கூட்டம்

பிரான்ஸில் திறந்தவெளியில் நடைபெறும் திருப்பலி நிகழ்வில் பங்கேற்க சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றையதினம் பாரிஸ் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக புகழ்பெற்ற ‘அவென்யூ டெஸ் சாம்ப்ஸ்-எலிசீஸ்’ (Avenue des Champs-Élysées) வீதியில் மக்கள் நிரம்பியதாக கூறப்படுகிறது.

இதேவேளை இந்நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருத்தந்தை வலம் வருவதற்கு அருகில் உள்ள சாலைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்ஸில் நான்கு நாட்கள் மற்றும் மூன்று நகரங்களை உள்ளடக்கிய ஒரு தீவிரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு பாலியல் துஷ்பிரயோக விவகாரங்கள் நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருச்சபையின் நற்பெயரை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles