உக்ரைன்மீது நேற்றிரவு முழுவதும் ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தியது. இதில், இரு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். சமீப மாதங்களில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், கட்டட இடிபாடுகளில் மீட்பு பணி தொடர்கிறது. இதனால், இறப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டினிப்ரோ நகரம்மீதான தாக்குதலில் 8 வயது சிறுவனும் பெண் ஒருவரும் அடங்கலாக 12 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவ்மீதான தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
