பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்திய பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுமீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான வாய்மொழி சமர்ப்பணங்களின் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்துஇ உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
