மருத்துவ மகத்துவம்: இயற்கையான மண் குளியல்

இயற்கை மருத்துவத்தில் மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயன கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும்.

மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந்து உடல் சம் நிலை அடைகிறது.

உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.

மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.

சலித்த, மெல்லிய மண்ணை ஈரமான துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி, செங்கல் வடிவ அளவில் நோயாளியின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந்த காற்று வீசினால் குளிர்ந்த காற்று படாதவாறு மேலே போர்த்த வேண்டும். மண்கட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சூட்டை குறைக்கிறது.

மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது. இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சினைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சினைகளை சரிசெய்கிறது.

சுத்தம் செய்யப்பட்ட மண் 30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றது. மேலும் இது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

மண் குளியல் என்பது நோயாளி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். இது தோலில் ரத்த சுழற்ச்சியையும் வலிமையையும் அளிக்கின்றது. மண் குளியலின் போது நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்கவேண்டும். குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக் கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.

மண் குளியலின் பயன்கள்

உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.

உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.

உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.

பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக ரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.

மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்தி மண்குளியலையே பயன்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles