Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaசெப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை குறித்த அறிவித்தல்..!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை குறித்த அறிவித்தல்..!

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் அஸ்வெசும நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular