Monday, February 2, 2026
HomeMain NewsTechnology7000mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன்... சம்பவம் செய்யப்போகும் மோட்டோரோலா..!

7000mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன்… சம்பவம் செய்யப்போகும் மோட்டோரோலா..!

மோட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஜி86 பவர் மாடலுக்குப் பிறகு, நவம்பர் 5 ஆம் தேதி மோட்டோ நிறுவனம் ஜி பவர் சீரிசில் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாக ஜி67 பவர் என்ற மாடல் அறிமுகம் செய்யப்படுவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் 7000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி வழங்குவதை மோட்டோரோலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 58 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி LYT-600 சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் அனைத்து கேமராக்களிலும் 4K ரெக்கார்டிங் வசதி, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் ஸ்கிரீன் பாதுகாப்பிற்காக இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் MIL-810H சான்றிதழுடன் இராணுவ தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP64 சான்றுடன் வர இருக்கிறது. மேலும் 6.7-இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் 3 பேன்டோன் சார்ந்த நிறங்களல் வீகன் லெதர் ஃபினிஷுடன் வரும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கும்.

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் உடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு விரைவில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதை மோட்டோரோலா உறுதிப்படுத்தி உள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். அடுத்த வாரம் போன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும்போது இதன் விலையை தெரிந்துகொள்ளலாம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular