மட்டக்களப்பில் கனமழை; வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, போன்ற கிராமங்களில் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உதவித் தவிசாளர் மே.வினோராஜ் , பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால நிலைமையை கருத்தில்கொண்டு, வீதியை வெட்டி , பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெள்ள நீரை வழிந்தோட செய்யும் வகையில், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பாதுகாப்பாக தற்காலிக கால்வாய்களால் நீர் வடிந்தோடச் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் இடம்பெறுமாக இருந்தால் உடன் செயற்படுவதற்காக மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத்தினர், கடற்படை உள்ளிட்ட முப்படையினரும், தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பானர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles