புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலிடுவார்கள் – பிரித்தானிய தூதுவர் நம்பிக்கை

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை செய்வார்கள் என்று அந்த நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம. பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் டித்வா புயலால் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் அரச அதிபரிடம் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர், “பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்”, என்று கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles