#image_title

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் ‘குஷ்’ வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

போதை தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஜேர்மன் ரெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் இரு சிங்கள மாணவர்களின் உடைமையில் இருந்து ‘குஷ்’ வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென்னிலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு மாணவனின் உடைமையில் 1 கிராம் ‘குஷ்’ பேதைப்பொருளும் மற்றைய மாணவரின் உடைமையில் 710 மில்லி கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here