சுன்னாகம் தமிழ் பொறுப்பதிகாரியின் அடுத்த அதிரடி நடவடிக்கை – இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது!
சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம் நகரப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில் பணியாற்றிய ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் குறித்த சந்தேகநபரான, மைலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















