இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகக் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ‘இலங்கை – இந்திய சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் முதன்முறையாக, இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பிணைப்பு ஆழமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

இலங்கைக்குள் வந்த மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்திய நிறுவனங்களிடமிருந்தே வந்துள்ளன.

இவை நேரடியாகவோ அல்லது மூன்றாம் நாடுகளின் ஊடாகவோ இலங்கையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here