பொலிவியா, எல் ஆல்டோ பகுதியில் ஏற்பட்ட சரக்கு விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்காவிலுள்ள பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகில் எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் ஓடு பாதையிலிருந்து விலகிச்சென்று தீப்பிடித்து எரிந்து, அருகிலிருந்த நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். விமான ஊழியர்கள் மற்றும் வாகன சாரதிகளும் உயிரிழந்தவர்களுள் அடங்குவர்.

காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து காரணமாக குறித்த சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here