உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை பேலியகொட பகுதியில் வைத்து சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதி உத்தரவை வழங்கியுள்ளது.

















