ஈரான் கப்பலை மீட்டதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா. பாராட்டு

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் (Marc-André Franche) தனது எக்ஸ்
தளத்தில் பதிவொன்றை இட்டு பாராட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் பல்லினத்தன்மை மீதான அர்ப்பணிப்பை மதித்து, நடுநிலைமை மற்றும் அமைதிக்காக இலங்கை அரசாங்கம் காட்டிய மனிதாபிமான தலையீட்டை பெரிதும் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் செயற்பட்ட விதம், சர்வதேச ரீதியாக வழங்கப்பட்ட
வாக்குறுதிகளைப் பாதுகாப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பைச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது என்றும் மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles