யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை பேருந்து ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில் இந்தத் இந்த தீவைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கொடிகாமம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
