இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த அரசாங்கத்தின் சலுகையை ஏற்பதாக வாக்களித்துள்ள நிலையில் மருத்துவர்களின் தொடர் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில், உள்ளூரில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் 2016 ஆம் ஆண்டின் வழக்கமான பயிற்சி மருத்துவர் ஒப்பந்த விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சராசரியாக 6.6 சதவிகித ஊதிய உயர்வு, ஏப்ரல் 2027-க்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 4,500 சிறப்புப் பயிற்சி இடங்களும் வழங்கப்படும்.
இதன்படி பயிற்சி மருத்துவர்களின் ஊதியம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சராசரியாக 35.2 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
சுகாதாரச் செயலாளர் ஜேம்ஸ் முர்ரே இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார். இது தேசிய சுகாதார சேவை சீர்குலைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்” மற்றும் சுகாதார சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தவும் அனுமதிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
