சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கின்றார்.
இந்த பயணத்தின் போது, அந்தந்த நாடுகளின் வெளிவிவகாரஅமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இந்த முக்கியத் தகவலைச் சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக இன்று (30) வெளியிட்டுள்ளார்.
