இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15) காலை 6.00 மணி முதல் எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கான QR குறியீடு செயல்படுத்தப்படும். பதிவுசெய்யப்பட்ட QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
QR குறியீடு முறையின் கீழ் வாரத்திற்கு ஒரு வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் விவரம்:
பேருந்துகள் – 60 லீற்றர் ,
மோட்டார் சைக்கிள்கள் – 5 லீற்றர்,
கார்கள் – 15 லீற்றர்,
வான்கள் – 40 லீற்றர்,
லொறிகள் – 200 லீற்றர்,
இதர வாகனங்கள் – 25 லீற்றர்,
முச்சக்கர வண்டிகள் – 15 லீற்றர்,
சிறப்பு தேவை வாகனங்கள் – 40 லீற்றர்
இந்த இணைப்பைப் பயன்படுத்தி QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளமுயும் https://fuelpass.gov.lk
