ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அஹிம்சை வழியில் போராடி தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதி உண்ணாரவிரதம் ஆரம்பித்த தினமான இன்று(19) கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது,
அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் கிளிநொச்சியில் இந்த அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நினைவேந்தல் நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
