யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்றிரவு(21) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இறங்குகின்ற பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் 18 வயதுடைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து இரண்டு கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
